இந்தோனேசியாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொலுகாஸ் பகுதியில் திடீரென கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.