சிரியா மீதான தாக்குதல்: அமெரிக்கா அனுமதி

சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்குவதற்கு அனுமதியை வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் சந்திப்பொன்றிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகச்செய்திகள்