யாழ்ப்பாணத்தில் பொலிசார் குவிப்பு!!!

வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு நாளை முதல் யாழில் வியாபாரங்கள் அதிகளவில் இருக்குமென்பதால், பொதுமக்கள் அதிகளவில் போக்குவரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதனால் திருடர்களின் நடமாட்டமும் அதிகரிக்கும் எனவும், இதனாலேயே பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாயகச்செய்திகள்