அனை த்துலக மனித உரிமை சங்கம் ஏற்பாட்டில் யாழ்நூலக எரிப்பின் நினைவு கூரல்

யாழ்நூலக எரிப்பின் நினைவு கூரல் பாரிசில் யூன் 3ல்அனை த்துலக மனித உரிமை சங்கம் ஏற்பாடு

சிறீலங்கா பேரினவாத்தால் தமிழர்களின் அறிவு அடை யாளமான யாழ் நூலகம் எரித்தழிக்கப்பட்ட 37வது ஆண்டு நினைவு கூரலை இம்முறை பிரமாண்டமாக செய்ய அனை த்துலக மனித உரிமை சங்கம் ஏற்பாடுகளை செய்வதாக அதன் செயற்பாட்டாளர் கஜன் தெ ரிவித்துள்ளார்.எதிர்வரும் யூன் 3 நாள் பிற்பகல் 2 மணிக்கு பிரான்ஸ் பாரிசில் கீழ்வரும் முகவரியில் இடம் பெறுவதுடன் மேலதிக தகவல் பெற தாெடர்பு இலக்கங்கள்வழங்கப்பட்டுள்ளன.

இடம்
JEANNE D ARC ,50 PLACE DE TORCY 750 18 PARIS
தொடர்புகளுக்கு
‎0033758087084 ,‎0033145988949
இந்நினைவு கூரலில் இலங்கை இந்திய ஐராேப்பியபேராளர்கள் கலந்து உரைகளையும் நிகழ்த்த உள்ளனர்.இது தாெடர்பில் அனைத்துலக மனித உரிமை சங்கம் கருத்துக்களை பதிவு செய்துள்ளது.அதில்

தமக்கென பெருமைகொள்ள அறிவுக்களஞ்சியமாய் யாழ் நூலகத்தையும் தமக்கென
ஒருபெரும் வலியுணர அப்பொக்கிசத்தின் தீயில் கருகிய நினைவையும் இன்றுவரைஎடுத்துச்செல்லும் ஈழத்தமிழ்சமுகம்.தமிழினத்தின் அறிவுடமை மீது கைவைத்த
சிங்கள பேரினவாத சிந்தனாவாதத்தின் அடையாள அழிப்பின் நோக்கம் 1981ல் யாழ்
நூலகஎரிப்பாகஆணவமெடுத்து முள்ளிவாய்க்கால்வரை அது தடம் மாறாமல்பயணித்து தனது அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்திஒருபெரும்இனப்படுகொலையைமனித பேரவலத்தை நடத்தி முடித்தும் அதன் பேரின சிந்தனாவாதம் இன்னும்
தீர்ந்தபாடில்லை.96ஆயிரம் அருப்பெரும் அறிவுப்பொக்கிசங்கள் 81ல்
யூன்ஒன்றில்காமினிதிசாநாயக்காவின் வழிநடத்தலில் யாழ்ப்பாணஅரசகாவல்துறையின் பேராதரவுடன் எரித்து அழிக்கப்பட்டது.விடிந்தபொழுதில்ஈழத்தமிழ்சமுகம்அதிர்ந்தது.இச்சேதி அறிந்த அருட்தந்தை தந்தை டேவிட்மாரடைப்பில் மரித்தார்.நூலகத்தில் சிங்கள பேரினவாதம் இட்ட தீ ஈழத்தமிழ்
சமுகத்தின் தன்மான இதய இடுக்குகளில் தீயின் விதையாய் வீழ்ந்தது.அது
முளைத்தது.அன்று இட்ட தீ புரட்சியாய் போராட்டமாய் பீறிட்டது.பிரபாகரனாய்
பெருத்தது.இளைஞர் யுவதிகளாய்கொதித்தது.குமுறியது.களங்கள் திறந்தும்உயிர்விதைகள் வீழ்ந்தன தமிழரின் அடையாளங்களை காக்கவும்
மீட்கவும்.

யாழ்ப்பாண நூலகம் ஒருபெரும்அறிவுக்கலாசாரத்தைகட்டிவைத்திருந்தது.அக்கலாச்சாரம் தன்னுள் நுழையும் தவறானஅன்னியத்தைவிரும்பத்தக்ககண்ணியத்தை.பிடுங்கப்படவேண்டியகளைகளை.தூவப்படவேண்டியவிதைகளை.எதிர்க்கவேண்டியபோலிகளை.அழைக்கவேண்டிய நிஜங்களை இனங்காணும்வல்லாதிவல்லமையை ஈழத்தமிழருக்குள் ஊற்றி வளர்த்தது.தமிழர் தம்
ஞானபீடமாய் யாழ்ப்பாணத்தில் கம்பீரமாய் உட்கார்ந்த அறிவின் ஆலயத்தின்மீதான சிங்கள பேரினவாதத்தின் எரிப்பு நினைவுகள் ஈழத்தமிழருக்கு பார்வையைசலவை செய்கின்றது.எரிந்த நூலகம் எரித்தவர்களாலேயேபுனருத்தாரணம்செய்யப்பட்டுவிட்டது.இப்பொழுதுஈழத்தமிழரின்விடுதலைப்போரைஅறியாதபுரட்சியின் நாட்களின் வாசத்தை மீட்ட அவகாசமற்றஅல்லதுசந்தர்ப்பமற்றஇன்றும் ஆக்கிரமிப்பு சூழலில்வாழும்ஒருதலைமுறையும் கரித்தடங்கள்மறைத்து வெள்ளையடிக்கப்பட்டு நிமிர்ந்திருக்கும் நூலகத்துள் தமதுஒப்படைக்கானதகவல்களைதேடிக்கொண்டிக்கின்றார்கள். அங்கு ஏதோ புத்தகத்துள்
அமைச்சர்காமினிதிசாநாயக்காவின்வரலாறும்புகைப்படங்களும் கூடஇருக்கலாம்.ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய வாரிசுரணிலின்புகைப்படங்களும் வரலாறு அடங்கிய புத்தகங்களும்இருக்கலாம்.அதில் ஐக்கியதேசிய கட்சியின் வரலாறுவெள்ளையடிக்கப்பட்டிருக்கலாம்.யாழ் நூலகம் ஒரு
துரதிஸ்ட வரலாற்றுள் புதைந்து போயுள்ளது.அதன் இன்றைய கம்பீரம்கம்பீரமாகதோன்றிவில்லை.அதன் கலசங்களில் இருக்கும் பறவைகள் இன்னும் பல அபசகுனங்களை
அறிவித்துச்செல்கின்றன.ஏன் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது.யார் அங்கு
வந்துபோகிறார்கள்.நூலகத்தில் யார் வருகின்றார்கள் போகிறார்கள்.அங்குயாராவது எதையாவதுதிணிக்கிறார்களா என கடந்த எமது தமிழர் அடையாளம்தொடர்பாக அச்சப்படும் மனது வஞ்சகமற்றுஆராயக்கூடும்.முடிவில் அச்சங்களில்ஏதாவது நியாயம் இருக்கக்கூடும்.

யாழ்ப்பாணத்துக்கு இந்திய துணைதூதரகத்தின்ஆசீர்வாதம்அதிகம்பரவுகின்றது.நடராஜரெனமூர்த்தியெனமகாலிங்கமெனபுன்னகைபொழியும்தூதர்கள்வருகின்றார்கள்.யாழ்பாணத்துகலைஅரங்குகள்வடஇந்திய சதங்கைகளால்நிறைகின்றது.எஸ்.பிபியின் காதலின் தீபமொன்று…..பாடல்யாழ்ப்பாணத்துகாற்றில் மிதந்து விடுதலைக்கனவு புரண்டோடிய நிலத்தின் குருதி படிந்த

நாட்களின் வலிகளை ஆசுவாசப்படுத்த முனைகின்றது.இந்தியகுடியரசு விழாகளைகட்டுகின்றது.ஈழத்தமிழர்களின் தலைவர்கள் எனப்படுபவர்கள் விருந்தில்
மகிழ்கின்றார்கள்.யாழ்ப்பாண நூலகத்துக்கு இந்திய தூதர்கள் நூல்களைவாரிவழங்குகிறார்கள்.யாழ்ப்பாணம் ஒரு குட்டி இந்திய மாநிலமாக மாற முனைகின்றது.
ஒரு கலாச்சார மையமொன்றை இந்திய அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் அமைக்க
திட்டமிருக்கின்றது.பிராந்திய நலனின் பிரமாண்டத்துள் ஈழத்தமிழரின்
அடையாளங்கள் இரண்டாம் தரப்பாகிஅவைபின்னொருகாலம் காகங்களும் கூவைகளும் கூடுகட்டும்இடமாகமாறக்கூடும்.எமதுஅடையாங்கள்வைக்கப்படவேண்டியஇடங்களில்.எமது அடையாளங்கள்உள்ளமையங்களில்.எமது அடையாளங்களாக
போற்றப்படவேண்டிய நிலத்தில் பிராந்தி சர்வதேச நலன்கருதிய அடையாளங்கள்
மையங்கள் உருவாக்குகின்ற அன்னிய எண்ணங்களை யாழ்ப்பாண மாநகர சபை
பிரதேசசபைகள் வடக்கு மகாண சபைகள் அதன் நிர்வாக தலைவர்கள் உணர்ந்து
உய்த்தறிந்து நக்கினார் நாவிழந்தார் எனும் கதையாக வாய்மூடி மௌனியாக
இருக்காமல் செயலில் இறங்கி அவற்றை ராசதந்திர அடிப்படையில் முறியடித்து
எமது அடையாளங்களை நிலை நிறுத்தவேண்டியது யாழ்ப்பாண நூலக எரிப்பின்
நினைவுகள் எடுத்துவரும் செய்திகள்.

எறிகணைகள் இல்லை போர் இல்லை மரணங்கள் இல்லை.ஆனாலும் போர்
நடக்கின்றது.இப்போர் நடந்துகொண்டே இருக்கும்.ஏனெனில் தமிழர்கள் உலகின்மூத்த மொழிக்கும் பண்பாட்டுக்கும் உரித்தானவர்கள்.அறிவுடைமைக்குசொந்தக்காரர்கள்.மீண்டும் இந்த பூமியை கடந்த சில ஆண்டுகள் வரையில்
முப்படைகளோடு உலகத்தை பிரபாகரன் என்ற பெருவீரன் தலைமையில்அதிரவைத்தவர்கள்.தாயகம்தேசியம்தன்னாட்சிக்காக இலட்சம் வரையில் உயிர்களைதியாகம் செய்தவர்கள்.எனவே தமிழர் மரபணுவின் பண்புகள் திரிபடைந்துசெல்லும்வரை கண்ணுக்குத்தெரியாத போர் தமிழர்கள்மீதுநிகழ்த்தப்படும்.

இப்போரைஎப்படிஎதிர்கொள்ளவேண்டுமென்பது நம்
சிந்தைக்குள் நூலக எரிப்பு விதையாக வீழ்த்தும் செய்தி.

அனை த்துலக மனித உரிமை சங்கம்
இடம்
JEANNE D ARC ,50 PLACE DE TORCY 750 18 PARIS
தொடர்புகளுக்கு
‎0033758087084 ,‎0033145988949

Allgemein