தமிழக மீனவர்களை துரத்தியடித்த இலங்கை கடற்படை: 5 பேர் காயம்

இலங்கையின் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஐந்துபேர் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு துரத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் புதன்கிழமை இரவு இடம்பெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களே காயமடைந்துள்ளனர்.

அவர்கள் நாகபட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Allgemein