2019ல் ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை விலகும்!

2019ம் ஆண்டு முதல் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விவகாரங்களிலிருந்து விலகிக் கொள்ளும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விவகாரங்களிலிருந்து விலகிக் கொள்ளும் என தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு அறிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை செயற்பட்டு வருவதனால் அரசாங்கம், இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கை தொடர்பில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒன்பது ஆண்டுகள் இடைவிடாது வேறு எந்தவொரு நாடு தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுத்தது கிடையாது என சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Allgemein