பிளவுபடுகிறது ஆப்பிரிக்க கண்டம்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுப்பட்டு வருகிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் ஆப்பிரிக்க கண்டத்தில், மிகப்பெரிய நிலப்பிளவு ஏற்பட்டது.

இந்த பிளவின் காரணமாக கென்யாவில் உள்ள நைரோபி – நரோக் நெடுஞ்சாலை முழுவதும் சேதமடைந்ததோடு, அப்பகுதியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டது.

வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை சமமற்ற இரு தட்டுகளாக பிரித்துள்ளது.

அவை சோமாலி மற்றும் நியூபியன் என கூறப்படுகின்றன. இந்த பிளவு அதிகரித்துக் கொண்டே போகும் தருணத்தில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபடும் வாய்ப்புள்ளது என அதிர்ச்சி தகவலினை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பிளவின் காரணமாக எத்தியோப்பியா, ருவாண்டா, தான்ஸானியா, ஜாம்பியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனிக் கண்டமாக பிரியும் நிலை ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இருந்தபோதும் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் ஆகுமென கூறப்படுகிறது.
உலகச்செய்திகள்