9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. !

வரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர்ப்பு விசை காரணமாக தனது பாதையில் இருந்து விலகி வருகிறது. வரும் ஞாயிறு அன்று பெரும் அக்கினிப் பிழம்போடு அது எரிந்த வண்ணம் பூமியில் விழ உள்ளது.

இதன் மொத்த எடை சுமார் 9 தொன் ஆகும். சீனாவினால் உருவாக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக இது பூமிக்கு மேல் விண் வெளியில் சஞ்சரித்து வந்தது. ஆனால் அது மெல்ல மெல்ல தனது பாதையை இழக்க ஆரம்பித்தது. 2011ம் ஆண்டு இதனை மீண்டும் அதன் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டு வரும் கடைசி முயற்ச்சியில் சீன விஞ்ஞானிகள் இறங்கினார்கள். இருப்பினும் அதுவும் தோல்வியை தழுவிய நிலையில்.

தற்போது வரும் ஞாயிறு காலை 11.30 மணிக்கு(லண்டன் நேரப்படி) அது பூமி மீது வீழ உள்ளது. இதனால் பல நகரங்கள் மேல் துண்டுகள் வந்து விழ வாய்புகள் உள்ளது. லண்டன் , மும்பாய், பாரிஸ் றோம், மற்ரிட், என்று சுமார் 12 நகரங்கள் மேல் இதன் துண்டுகள் விழும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே லண்டனில் வாழும் தமிழர்கள் ஜாக்கிரதை…

உலகச்செய்திகள்