ஆட்சிக்கதிரைக்காக கத்திச்சண்டை!

கொழும்பில் ஆட்சிக்கதிரைக்காக கத்திச்சண்டை வடக்கு கிழக்கில் ஆட்சிக்கதிரைக்காக கோலாட்டம்

சற்று தணிந்திருந்த கொழும்பு ஆட்சிக்கதிரைக்கான கத்திச்சண்டை மீண்டும் களை கட்ட ஆரம்பித்துள்ளது. இரவோடு இரவாக வெளியிட்ட வர்தமானி அறிவித்தல் மூலம் ரணில் வசமிருந்த மத்திய வங்கியையும் முக்கிய தீர்மானம் எடுக்கும் தேசிய அலகுகளையும் பிடுங்கிவிட்டார் மைத்திரி. ரணிலின் பல்லைப் பிடுங்கி அழகு பார்க்கிறார். பதிலுக்கு ரணில் என்ன செய்யப் போகிறார். அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஏப்ரல் 4ஆம் நாள் அரங்கேரவுள்ள நிலையில் கத்திச்சண்டை தீவிரமடைகின்றது.

2020 இல் சனாதிபதித் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் வரும் நிலையில் தற்போதைய மைத்திர் ரணில் கூட்டு அதில் தொடாராது என்ற நிலையில் முன்கூட்டியே மோதலுக்கு அனைவரும் தயார். மைத்திரியின் அதிகாரங்கள் ஆரம்பத்திலேயே பிடுங்கப்பட்டு விட்டதால் ஆட்சியை கலைத்து முன்கூட்டிய தேர்தலை மைத்திரியால் அறிவிக்க முடியாது. மகிந்தவுடள் ஒன்றிணைந்து ஐதேகவில் இருந்து ஒரு பகுதியினரை பிரித்தெடுத்தால் மட்டுமே ரணிலை ஆட்சிக்கதிரையில் இருந்து அகற்ற முடியும். வரும் நாட்கள் சுவாரசியம் நிறைந்தவையாகவே அமையும்…

nஐனிவாவில் மோசமாக சொதப்பிவிட்டு (அது குறித்து பின்னர் விரிவாக வருகின்றேன்) வெற்றிக்களிப்பில் தமிழ் தலைமைகள் உள்ளுராட்சி சபை ஆட்சிக்கதிரைக்காக கோலாட்டம் போடுகின்றன. இவரும் இவரும் கோலாட்டமா என நீங்களே மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு கண்கொள்ளா அதிரடிக் கோலாட்டம் அது போங்கள்…

அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர எதிரியும் கிடையாது என்பார்கள் அதன் அர்த்தம் இப்போது தான் புரிந்தது போங்கள். சேர்ந்திருப்பவர்களை முன்னைநாள் ஆயுதக்குழுக்கள் என்று பரிசகிப்போம் பின்னர் ஒட்டுக்குழுக்கள் சண்டாளர்கள் கொலைகாரர்கள் என்றெல்லாம் பழித்தவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து எம்மைக் காக்க வந்த இரச்சகர்கள் என்போம்.

தாயகத்திலும் புலத்திலும் தமிழர் சமூகத்தில் அபாய எச்சரிக்கை எழுப்பும் அளவிற்கு அனைத்து வயதினரையும் மனஅழுத்தம் பாதித்துள்ளது. வாழ்க்கையை இலகுவாக எடுத்துக் கொண்டு அடிக்கடி நாம் சிரிக்க மறந்ததால் ஏற்பட்டுள்ள வினை அது. எம்மை இந்நிலைக்கு தள்ளிவிட்ட அரசியல் வியாபாரிகள் சிரிப்பு காட்ட முனைகின்றனராம்… மன அழுத்தத்தை அதிகரியாதீர்கள் மக்களே… வாய்விட்டுச் சிரியுங்கள் இந்த அரசியல் கோமாளிகளைப் பார்த்து ….

Allgemein