வற்றாப்பளையில் பக்தர்கள் முன் அதிசய நிகழ்வு!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நேற்று நடந்த மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவின் ஆரம்ப யாக பூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த பக்த அடியார்களுக்கு வற்றாப்பளை கண்ணகை அம்மன் அருள் பொழிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்று வரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின் போது தீபத்தில் திருவுருமாகத் தோன்றிய அம்மன் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வந்திருந்த அம்மனின் பக்த அடியார்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வரும் வற்றாப்பளை அம்மனின் ஆலய திருவிழாவின் போதும், இவ்வாறு ஒவ்வொரு விதமாக அம்மனின் அற்புதக் காட்சிகள் தென்படுவதுடன், கண்ணகை அம்மன் தரிசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் வந்து கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களும் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று 30-03-2018 அன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினைத் தொடர்ந்து, ஆலயத்தில் 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயகச்செய்திகள்