வீட்டின் மீது விழுந்த விமானம்: 10 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் தலைநகர் அருகே விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரட்டை எஞ்சின் கொண்ட Piper PA-23 Apache என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ப்ளாரிடல் நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் மற்றும் விமானத்தில் பயணித்த 5 பேர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.
ப்ளாரிடல் விமான நிலைய ரன்வேயிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உலகச்செய்திகள்