துயர் பகிர்தல் மாணவி பிரியங்காவுக்கு கண்ணீர் அஞ்சலி

மாணவி பிரியங்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகருகம்பனையை வசிப்பிடமாக கொண்ட யா/மகாஜனக் கல்லூரியின் க.பொ.த. (உ/த) 2018 வர்த்தகப்பிரிவு மாணவி சிவநேசன் பிரியங்கா இன்று இரவு காலமாகிவிட்டார். மூளையில் ஏற்பட்ட நோய் காரணமாக நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று எம்மை விட்டு பிரிந்துவிட்டார். சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வலம்வந்த பிரியங்கா குறிப்பாக மகாஜன பெண்கள் உதைபந்தாட்டத்தின் மூத்த வீராங்கனையாக மகாஜனாவின் பெருமைக்கு வலுச்சேர்த்தவர்.
கொடிய நோயால் எம்மைவிட்டு பிரிந்த பிரியங்காவின் ஆத்மா சாந்தியடையவும் ஆறாத்துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் எல்லாம் வல்ல ஆனந்த நடராஜப் பெருமானை பிரார்த்திக்கின்றேன்.

துயர் பகிர்தல்