தரையிறங்கும் முன்பே விமானத்திலிருந்து குதித்த பயணிகள்!

விமானம் தரையிறங்கும் முன்பே பயணிகள் குதித்து வெளியேறிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் விமானம் ஒன்று டல்லாசில் இருந்து போனிஸ் பகுதிக்கு 140 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானியின் இருக்கை பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அச்சமடைந்த விமானிகள் உடனடியாக பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து விமானத்தை அவசர அவசரமாக அல்புகுயர்கியூ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தனர்.
ஆனால் பயணிகள் விமானம் தரையிறங்கும் வரை காத்திராமல் உயிர்பயத்தில் அவசர கால வழியாக சிலர் விமானம் 8 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே வெளியே குதித்துள்ளதாக தெரியவருகிறது.

உலகச்செய்திகள்