அவுஸ்திரேலியா, சுவிஸ் நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தற்போது இலங்கையில்!!!

அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று (14) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது.

நாடுகடத்தப்பட்டவர்கள் காலை 6.20 மணியளவில் அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்களும், 9 மணியளவில் சுவிட்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கையை வந்தடைந்தவர்கள் விசேட விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகச்செய்திகள்