போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல்!-

வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் மீது நேற்று இரவு 9 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் இருந்து வைரவபுளியங்குளம் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த மோட்டர் சைக்கிள் நிறுத்தாது சென்ற போது அதனை விரட்டி சென்ற போக்குவரத்து பொலிசார் வவுனியா, புகையிரத வீதியில் உள்ள பூங்கா வீதிச் சந்தியில் குறித்த மோட்டர் சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

பொலிசாரும் அதனை தடுத்து அவரை கைது செய்ய கடும் பிரயத்தனம் செய்தனர்.

சுமார் 10 நிமிடங்களாக அப்பகுதியில் போக்குவரத்து பொலிசாரும் குறித்த இளைஞனும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேலதிக போக்குவரத்து பொலிசார் வருகை தந்து குறித்த இளைஞரை கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதேவேளை, இச்சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் வேறு மூன்று மோட்டர் சைக்கிளில் பயணித்த ஆறு இளைஞர்கள் வவுனியா மணிக்கூட்டு கோப்புர சந்தியில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் வீதி சோதனை செய்ய நிறுத்தியுள்ளனர்.

அப்போது குறித்த இளைஞர்கள் பொலிசாரை சீண்டும் வகையில் தமது செயற்பாட்டினை மேற்கொண்டதாக தெரியவருகிறது
Allgemein