ஜெனிவாவில் இலங்கை விவகாரம்: இன்று என்ன பேசப்போகிறார் போர்க்குற்ற நிபுணர்!

இலங்கை விவகாரம் ஜெனிவாவில் சூடுபிடித்துவருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வுகள் ஜெனிவாவில் நடைபெறுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடவுள்ளார்.

பாரிய கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு அனைத்துலக முறைமை எவ்வாறு தோல்வி கண்டது:

இலங்கையின் தமிழர்களுக்கு எதிராக நீடிக்கும் சட்டவிரோத தடுத்து வைப்பு, சித்திரவதை, பாலியல் வன்முறைகள்” என்ற தொனிப்பொருளில், பக்க அமர்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளர் றிச்சாட் ரொஜெர்சும் இதில் பங்கேற்கிறார்.

உலகச்செய்திகள்