கண்டி – திகன சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

கண்டி – திகன சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற மற்றும் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காவற்துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை , பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு சிறப்பு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேபோல் , ஏற்படக்கூடிய நிலைமைகளை தடுப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Allgemein