காணாமல் போனோரின் குடும்பத்திற்கு நீதியைப் பெற மகிந்த செயற்பட்டாராம்!!

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கு சமகால நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை அரசாங்கத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் 2016ம் ஆண்டில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடிந்தது.

இந்த அலுவலகம் கடந்த மாதம் முதல் செயற்பட்டு வருகின்றது.

1980ம் ஆண்டு முதல் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களை இது தொடர்பில் தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 1980ம் ஆண்டு முதல் காணாமல் போனோர் குறித்து, முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொடுத்தாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் காணாமல் போனோரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், தாமும் செயற்பட்டதாக அவர் கூறினார்.

இந்த முயற்சி வெற்றி பெறுவதற்காக, அன்னையர் முன்னணி அமைப்பு என்ற பெயரில் அமைப்பொன்றும் அமைக்கப்பட்டது.

அதன் இணை அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், தாமும் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இன, மதம், பிரதேச வேறுபாடுகளின்றி காணாமல் போனோர் தொடர்பான குடும்ப அங்கத்தவர்கள் எதிர்கொண்ட சிரமங்களுக்குத் தீர்வை முன்னெடுக்க வேண்டும்.

இன பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Allgemein