துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி

திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி
(கோபால்)
தோற்றம் : 31 ஓகஸ்ட் 1955 — மறைவு : 23 பெப்ரவரி 2018

யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

பவி(பிரான்ஸ்), சுரேன்(நோர்வே), சிவா(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான பூபாலலிங்கம், திருப்பரஞ்சோதி, மற்றும் தெட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற அசலாம்பிகை, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, நகுலாம்பிகை, மற்றும் மங்கையர்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கரன்(பிரான்ஸ்), மயூரன்(நோர்வே), சானு(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேஸ், தறுமு(சுவிஸ்), செல்வம்(சுவிஸ்), காலஞ்சென்ற வசந்தி(சுவிஸ்), ராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிவானி, அதிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
8ம் ஒழுங்கை,
நெளுக்குளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772365346

துயர் பகிர்தல்