யாருக்கும் அடி பணியமாட்டோம்! ரணிலை நீக்க முடியாது….

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து எமது கட்சியின் தலைவரை நாங்கள் நீக்கமாட்டோம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் ஏற்படுத்தியுள்ள அரசியல் திருப்புமுனையால் கொழும்பில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவளித்த கட்சி பெரு வெற்றியைப்…

வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தின் முன் விசப் போத்தல்களுடன் ஆசிரியர்கள்!! நடந்தது என்ன?

தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தற்கொலை செய்வதற்கான மருந்து போத்தல்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறித்த போராட்டத்தை மத்திய கல்வி அமைச்சின் முன்பாகவும், யாழிலும் நேற்று காலை தொடக்கம் தொடர்ச்சியாக நடத்திவருகின்றனர்.182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில்,…

மகிந்தவை அழைத்த மைத்திரி! மறுத்த மகிந்த!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியும் இன்று இறுதி முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி மைத்திரிபால…

கூட்டமைப்பிற்கு நேசக்கரம் நீட்டும் ஐ.தே.க!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வட மாகாணத்திலும் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாமையே இதற்குக் காரணமாகும்.இந்நிலையில், யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.…

தேர்தலில் தெரிவாகிய உறுப்பினர்களுக்கு மாதக் கொடுப்பனவு எவளோ தெரியுமா ?

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெரிவாகிய உறுப்பினர்களுக்கு 15000 ரூபா மாதக் கொடுப்பனவாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய சலுகைகள் வரப்பிரசாதங்களை வழங்காது 15000 ரூபாவினை மட்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மோட்டார் சைக்கிள், செல்லிடப்பேசி கொடுப்பனவு, பெக்ஸ் இயந்திரங்கள் போன்றன வழங்கப்படாது என உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கமால்…

சிறிலங்கா ரூபா ஒரே நாளில் 60 சதம் சரிந்தது!

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற்று அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான  சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 60 சதத்தினால் குறைந்து, 156.74 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றிபெற்றதை அடுத்து…

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு அபாய எச்சரிக்கை!

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் அனைத்து பயண முறைகளிலும் போதைப்பொருள் கடத்தும் நபர்கள் ஊடுருவியுள்ளனர். பல நுட்பான முறையில் போதைப்பொருட்கள் கை மாற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக விமானங்களில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளை பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு பயண பொதிகளை கொடுத்து விடும்…

யாழில் பெண்ணொருவரின் மனிதாபிமானம்!

யாழ்ப்பாணத்தில் தவற விடப்பட்ட தங்க நகை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அநாதரவாகக் கிடந்த கைச்சங்கிலி ஒன்றே இவ்வாறு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைச்சங்கிலியை கண்டெடுத்த பெண் ஊழியர், அதனை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைந்துள்ளார். வைத்தியசாலை…

கணனி தொழில் நுட்பபொறியலாளர் அனோஜன் இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.02.2018

யேர்மனியில்வாழ்ந்துவரும் உதைபந்தாட்டவீரனும் கணனி தொழில் நுட்பபொறியலாளராக பணிபுரிந்துவரும் அனோஜன் இரத்தினசிங்கம் அவர்கள்15.02.2018 இன்று பிறந்தநாள்தனை அப்பா இரத்தினசிங்கம், அம்மா கிருஷ்ணலீலா , தங்கை அனாமிக்கா , மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்கள், எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றனர்,