160 24 இலட்சம் பெறுமதியுடைய தங்கக் கட்டிகளை கடத்த முற்பட்ட பெண் கைது

சுமார் 24 இலட்சம் ருபா பெறுமதியான நான்கு தங்க கட்டிகளை இந்தியாவின் சென்னைக்கு கடத்தி செல்ல முற்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இன்று (09) காலை 08.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல் 129 என்ற விமானம் மூலம் அவர் இந்தியா நோக்கி புறப்பட இருந்தார்.

குறித்த பெண்ணை கைது செய்துள்ள விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உலகச்செய்திகள்