கழுத்து வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவனை நாடு கடத்த ஏற்பாடு..பிரித்தானிய MP க்கள் போர் கொடி:

பிரித்தானிய MP க்கள் போர் கொடி: கழுத்து வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவனை நாடு கடத்த ஏற்பாடு..

அமைதிவழியில் அறப்போராட்டம் நடத்திய தமிழர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவன், அடையாளம் காணப்பட்டுள்ளான். இவன் பிரிகேடியர் தரத்தில் உள்ள ராணுவ அதிகாரி என்றும். இவன் பெயர் பிரியங்க பெனாண்டோ என்று அதிர்வு இணையம் அறிகிறது. இந்த வீடியோவை அதிர்வு இணையம் முதலில் வெளியிட்டதோடு, பிரித்தானிய காவல் துறை மற்றும் MPக்களுக்கு அனுப்பியும் இருந்தது. இன் நிலையில் லேபர் கட்சி MP சிபோன் மக்டொனாவும், நிழல் அமைச்சர் ஜோன் ரயன் ஆகியோர் உடனடியாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை தொடர்பு கொண்டுள்ளார்கள்.

பிரித்தானிய விசாவில் வந்துள்ள பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோவை உடனே நாடு கடத்துமாறு எதிர்கட்சி MPக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதற்கு ஆதாரமாக குறித்த வீடியோவை அவர்கள் , வெளிநாட்டு அமைச்சுக்கு அனுப்பியுள்ளார்கள். மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரித்தானியாவில். இதுபோல மிகவும் அசிங்கமாக நடந்து கொண்ட அவரை உடனே நாட்டை விட்டு அனுப்பவேண்டும் என்றும் , அவரது ராஜதந்திர பாதுகாப்பை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளது.

இது இவ்வாறு இருக்க , பிரித்தானியாவில் வைத்தே தமிழனின் கழுத்தை வெட்டுவேன் என்று சிங்களவர்கள் சைகை காட்டுகிறார்கள் என்றால். இலங்கையில் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதனூடாக அகதிகள் அந்தஸ்த்து கோரும் நபர்களின் விடையத்தில், பிரித்தானிய அரசு சற்று சிந்திக்கவேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது.

லேபர் கட்சிக்கான தமிழர் அமைப்பின் செயலாளர் திரு சென் கந்தையா அவர்கள், உடனடியாக MPக்களை தொடர்புகொண்டு இச்சம்பவம் தொடர்பாக பேசிய பின்னரே இன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

உடல் நலம்