2 கோடி இலஞ்சம் வாங்கிய த. தே. கூட்டமைப்பின் சிலர் :

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள் தலா இரண்டு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்தார்.

சிவசக்தி ஆனந்தன் பல முறை வெளியிட்டுள்ள இந்த கருத்து காரணமாக மக்களுக்காக பல தசாப்தங்களாக அர்ப்பணிப்பு சேவையாற்றி வந்த தனது தரப்புவாதியான மாவை சேனாதிராஜாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி அனுப்பியுள்ள கடித்தில் கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் தனது தரப்பு வாதிக்கு ஏற்பட்ட அவப்பெயருக்கு இழப்பீடாக ஒரு பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டத்தரணி, சிவசக்தி ஆனந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

தாயகச்செய்திகள்