அஷ்ரப்பின் மரணம் விபத்தல்ல ; ரணில் மிகப்பெரிய மோசடியாளர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம்.அஷ்ரப் விபத்தில் உயிரிழக்கவில்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அவர் திட்டமிடப்படடே கொலை செய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகப் பெரிய மோசடியாளர் எனவும், இந்த விடயம் ஜனாதிபதியின் வாள்வீச்சில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை – கல்முனை மாநகர சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லா,

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க மிகப் பெரிய விரோதி என அஷ்ரப் பிரகடனப்படுத்தியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அஷ்ரப் அங்கீகரிக்கவில்லை.

அவ்வாறு தனித்துவமான கட்சியை குழிதோண்டிப் புதைத்து விட்டு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியுடன் களமிறங்கியுள்ளார்.

அஷ்ரப்பின் மரணத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது எனும் உண்மை வெளிவராமல் போகாது எனவும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

Allgemein