24 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு : இராணுவ அதிகாரியை ஆஜராகுமாறு நீதிபதி மா.இளஞ்செழியன்உத்தரவு

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பட்டிவெலானவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (18) உத்தரவிட்டார். 1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில்…

ஒன்றுசேர அழைப்பு விடுத்த வடகொரியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

கொரிய தீபகற்கத்தில் அமைதி கிராமம் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் வட மற்றும் தென் கொரியா நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக்கொண்டு பேசினர். இந்த கூட்டத்திற்கு பின் முக்கியமான செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு நாடுகளும் ஒரே கொடியின் கீழ் பங்கேற்க உள்ளது. இதற்காக…

தமிழீழ தேசத்தை மைத்திரி அனுமதித்தாரா? நாமலுக்கு எழுந்த சந்தேகம்

தமிழீழ தேசத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக் கொள்கிறதா? என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வினா எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் ஞானம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் உள்ளூராட்சி…

.மனதை நெருடிய இரண்டு கால்களும் அற்றவருக்கு வாழ்வாதார உதவி

கடந்த சில நாட்களாக முகப்புத்தகத்தில் வீடியோ ஊடாக இரண்டு கால்களும் அற்ற நிலையில் வாழ்வாதாரத்திற்கு உதவி கோரிய கிளிநொச்சி எள்ளுக்காட்டைச் சேர்ந்த தங்கராஐா என்பவரிற்கு JAFFNA CENTRL COLLEGE OBA-96 நண்பர்கள் உடனடியாகவே யாழ்எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக தினமும் 5 லீற்றருக்கு மேல் பால் தரக்கூடிய பசு…

சற்று முன் யாழில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பலாலி வீதியில் ஊரெழு பகுதியில் இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில்…

பதுங்கு குழியில் மறைந்திருந்த இளைஞர்கள்!

யாழப்பாணம்; தென்மராட்சி தெற்கு மறவன்புல பகுதியில் பதுங்கு குழியினுள் மறைந்திருந்த கொள்ளைக் கும்பல் ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுங்கு குழியினுள் மறைந்திருந்த குறித்த இளைஞர்களை நேற்று முன்தினம் கைது செய்த பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களை 14 நாட்களுக்கு…

பிறந்தநாள் வாழ்த்து செல்வி.சாம்பவி திலகேஸ்வரன் 25.01.2018

  25.01.2018யேர்மனியில்வாந்துவரும் திருதிருமதி திலகேஸ்வரன் தம்பதிகளின்புதல்வி செல்வி.சாம்பவி அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,அண்ணா தங்கச்சி.உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்திநிற்கிறது

தமிழ் மக்களை அடிமாடுகளாக எண்ணும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களை அடிமாடுகளாக எண்ணுவதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளரின் புளியந்தீவு தேர்தல் பிரசார அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றிய பிரசாந்தன், பொங்கல்…

கிளிநொச்சி சிறுவனை தாக்கியமை தொடர்பில் விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுகொண்டிருந்த  சிறைச்சாலை பேரூந்தில் பயணித்த சிறைக் காவலர்களால் கிளிநொச்சி சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. நேற்றைய தினம்  (23) மாலை கிளிநொச்சி  கரடிப்போக்கு சந்தியில்  சிறைக்காவலர்கள் பயணித்த  சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் …

ஈரானுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்யும் வடகொரியா

சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளி ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் மீது ஐ.நா சபை பல்வேறு தடைகளை விதித்தது. தற்போது கள்ளத்தனமாக ஈரானுக்கு ஏவுகணைகளை வடகொரியா வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “நியூக்ளியர் ஷட்டவுன்” என்ற புத்தகத்தின் ஆசிரியரும், கிழக்காசிய…