பொருளாதார அடிப்படையில் இலங்கை 40வது இடம்

பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் லித்துவேனியா முதலிடத்தையும் இலங்கை 40வது இடத்தையும் வகித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது.

குறித்த மாநாட்டில் உலகின் வளர்ந்து வரும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியலை உலக பொருளாதார கூட்டமைப்பு தயாரித்துள்ளது.

இந்த பட்டியலில் பொருளாதார அடிப்படையில் வளரும் நாடுகளில் லித்துவேனியா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன் அடுத்த வரிசையில் அயர்லாந்து, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன. அவுஸ்திரேலியா 9வது இடத்தை வகித்துள்ளது.

மேலும் ஜேர்மனி (12) கனடா(17), பிரான்ஸ்(18), பிரித்தானியா(21), அமெரிக்கா(23), ஜப்பான்(24), இத்தாலி(27)வது இடங்களையும் வகித்துள்ளது.

கடந்த ஆண்டு 60 வது இடத்தில் இருந்த இந்தியா 62வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தியாவின் அண்டை நாடுகள் பெரும்பாலானவை இந்த பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளன. நேபாளம் 22வது இடத்திலும், சீனா 26வது இடத்திலும், வங்காள தேசம் 34வது இடத்திலும், பாகிஸ்தான் 47வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein