நியுயார்க்கில் இருந்து லண்டனுக்கு பறந்த விமானம் சாதனை

நியுயார்க்கில் இருந்து லண்டனுக்கு 3 நிமிடங்கள் முன்னதாக வந்த விமானம் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நியுயார்க்கில் இருந்து லண்டனுக்கு சென்ற பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 6 மணி 6 நிமிடத்தில் சென்றடைய வேண்டிய தூரத்தை 5 மணி 16 நிமிடத்தில் சென்று சாதனை படைத்துள்ளது. ஆனால் அந்த சாதனையை நார்வெயன் ஏர்லைன்ஸ் விமானம் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

நார்வெயன் ஏர்லைன்ஸ் போயிங் 387-9 டிரீம் என்ற விமானம் 5 மணி 16 நிமிடம் என்ற சாதனையை முறியடித்து 5 மணி 13 நிமிடம் என்ற புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. இது குறித்து விமானி கூறியதாவது, “வானின் காலநிலை சாதகமாக அமைந்துள்ளதாலே 53 நிமிடங்கள் முன்னதாக செல்ல முடிந்துள்ளது. மேலும் சாதனையை எதிர்பார்த்து விமானத்தை செலுத்தவில்லை அவ்வாறு செலுத்தியிருந்தால் 5 மணித்தியாளங்களிலே லண்டனுக்கு சென்றடைந்திருப்பேன்.” என கூறியுள்ளார்.

உலகச்செய்திகள்