ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சி எல்லை கடந்தது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணம். மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழ்ந்து வரும் செல்லப் பிராணிகளாக நாய்கள் இருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள் தங்களது வீடுகளில் நாய்களை வளர்த்து வருகின்றனர்.
உலகில் பெரும்பாலானோர் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்த்து வரும் நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இந்த வழிமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விலங்குகளின் குரலொலி மற்றும் முக பாவணைகளை எளிமையான ஆங்கிலத்தில் மாற்றம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். கான் லெபோட்சிகோஃப் நாய்களின் உடல் மொழி மற்றும் அவை தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகளை 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தனது ஆய்வு மட்டுமின்றி பல்வேறு இதர ஆய்வாளர்களின் தகவல்களை கொண்டு பெட் டிரான்ஸ்லேட்டர் (விலங்கு மொழிமாற்றம்) எனும் சாதனத்தை கடந்த பத்து ஆண்டுகளாக உருவாக்கி வருகின்றார்.
இத்துடன் நாய்கள் குரைத்தல், உறுமல் மற்றும் ஊளையிடுவதன் மூலம் அவை வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த வழிமுறை மூலம் கண்டறியும். மெஷின் லேர்னிங் மூலம் கம்ப்யூட்டர்கள் நாய்களின் உறுமல் மற்றும் வால் அசைவுகளின் மூலம் அவை வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை புரிந்து கொள்ள முடியும் என லெபோட்சிகோஃப் தெரிவித்துள்ளார்.
இன்னும் பத்து ஆண்டுகளில் நாய்கள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மனிதர்களால் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்சமயம் லெபோட்சிகோஃப் மற்றும் அவரது குழுவினர் இணைந்து கண்டறிந்திருக்கும் புதிய வழிமுறறையானது நாய்களின் மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்.
சூலிங்குவா எனும் நிறுவனத்தை துவங்கி இந்த குழுவினர் விலங்குகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான தொழில்நுட்ப சாதனங்கள் மனிதர்களை விலங்குகள் வெளிப்படுத்த விரும்பும் தகவல்களை மிக எளிமையாக புரிந்து கொள்ள வழி செய்யும்.
Allgemein