வெடி கொளுத்திய சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

தைப்பொங்கலை வரவேற்கும் நோக்கில் வெடி கொளுத்திய சிறுவனொருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தைப்பொங்கலை வரவேற்கும் முகமாக உலகம் எங்கும் கோலாகலமாக தமிழ் மக்கள் வெடி கொளுத்தி வரவேற்று வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில், மன்னார், ஆத்திமோட்டைப் பகுதியில் வெடி கொளுத்தி தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்த சிறுவனின் கையில் வெடி வெடித்ததில் கைவிரலில் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து குறித்த சிறுவன் சிகிசசைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக பண்டிகைகாலங்களில் இவ்வாறான விடங்களில் சிறுவர்கள் குறித்து பெற்றோர்கள் கவனமாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டுமென பொலிஸார் தெரிவித்தனர்

Allgemein தாயகச்செய்திகள்