நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முன்மாதிரியைக் காட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என சபாநாயகரிடம் துமிந்த திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த விடயத்தை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இவ்வாறு…

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோரிய இலங்கையர்களுக்கு நெருக்கடி!

இலங்கையர்கள் பெற்ற உதவிக் கொடுப்பனவை மீள செலுத்துமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் அரசியல் தஞ்சம் கோரி சுவிட்சர்லாந்து சென்ற இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட உதவி கொடுப்பனவை மீள வழங்குமாறு சுவிஸ் அரசாங்கம் கோரியுள்ளது. அதற்கமைய 3000 இலங்கையர்களிடம்…

இன்றே பதவி துறந்து வீடு செல்ல தயார் – ஜனாதிபதி

எனது பதவிக் காலம் குறித்து நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது, சிறந்த இலங்கையொன்றை கட்டியெழுப்புவதற்கான கனவொன்று தன்னிடம் உள்ளதனாலேயாகும் எனவும், மாறாக அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அல்ல எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது…

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல்!!

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களிடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. சம்பவத்தையடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து கலைப்பீடத்தின் நுன்கலை…

வவுனியாவில் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக போராட்டம்!

வடக்கு மகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 324 நாளாக தொடந்து வரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத் தலைவியான…

அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் – முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி சந்திப்பு!!

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விதித் துணைத் தலைவரும் அரசியல் அதிகாரியுமான திரு பட்ரிக் திலோவ் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தளபதியான மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுருவை சந்தித்துள்ளார். நேற்று முன்தினம் முல்லைத்தீவு பிரதேசத்திற்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டபோதே குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது இருதரப்பினருக்குமிடையிலான கருத்துக்கள் மற்றும்…

சீனாவின் பக்கம் செல்லும் சிறீலங்கா…..!

சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடு அல்ல. பாகிஸ்தான்…

வட மாகாண அபிவிருத்தியில் மாகாண சபையையும் உள்வாங்குங்கள் விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை செயன்முறைப்படுத்தும்போது அந்த நடவடிக்கைகளில் வடமாகாணசபையையும் உள்வாங்கவேண்டும் என என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரண்ஜித்த சிங் சந்துவிற்கும் வடமாகாண முதல்வர் சிவி விக்னேஸ்வரனிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே முதலமைச்சரால் இந்த கோரிக்கையை…

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினருக்கு இலங்கைஅனுமதி மறுப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவர், இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சுரேஸ்நாத் இரத்தினபாலன் என்ற 48 வயதுடையவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை 3.45 மணியளவில்…

ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குடியேற்றவாசிகளை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்திற்கு மன்னிப்பு கோரக் வேண்டும் என ஆபிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ட்ரம்ப், அமெரிக்காவில் குடியேறிய குடியேற்றவாசிகளை கடுமையான வசைச் சொற்கள் கொண்டு திட்டியிருந்தாரென தகவல்கள் வெளியாகியிருந்தன. அதிலும் ஹெய்ட்டி, எல் சல்வடோர் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிலிருந்து வந்தவர்களையே…