வவுனியாவில் வழங்கப்பட்ட விருதுகளில் குழப்பநிலை நீடிப்பதாக தகவல்!!

வவுனியா மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்ட கலாச்சார விழாவின்போது கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பெயர் மாறி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை சரி செய்யப்படவில்லை என கலைஞர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட கலாச்சார விழாவில் பல்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

இதில் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளில் பெயர் பொறிக்கப்பட்டிருந்த போதிலும் ஏற்பாட்டாளர்களின் குழப்பத்தால் கலைஞர்கள் பலருக்கு அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட விருதுகள் வழங்கப்படாது வேறு ஒருவருடைய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

வேகமாக விருதினை வழங்வேண்டி இருந்தமையினால் பெயர் மாறி சென்றுள்ளதாகவும், எனினும் விரைவில் அதனை சீர் செய்து தருவதாகவும் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

எனவே மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Allgemein