கொத்து ரொட்டியால் ஏற்பட்ட வன்முறை!!

யாழ்ப்பாணத்தில் கொத்து ரொட்டியால் வன்முறைச் சம்பவம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடனுக்குக் கொத்து ரொட்டி கேட்கப்பட்ட நிலையில் அதனை வழங்க உணவக உரிமையாளர் மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்தவர்கள் உணவகத்தை அடித்துச் சேதப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் இன்று மாலை நடந்துள்ளது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், சமூக சீர்கேடுகள் தலைவிரித்தாடுவதாக யாழ். மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Allgemein தாயகச்செய்திகள்