கனடாவில் கடுங்குளிரான காலநிலை !

கனடா, ரொறொன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் வரலாறு காணாத கடுங் குளிர் தாக்கத்திற்கு இன்று(05) வெள்ளிக்கிழமை உட்பட்டுள்ளது.

இதனால், கனடா சுற்று சூழல் அமைப்பு ஒரு விசேட காலநிலை எச்சரிக்கை அறிக்கையை விடுத்துள்ளது.

ரொறொன்ரோ, மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை மிக விறைப்பான கடுங்குளிர் 35-சி முதல் -40சிக்கு குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று பிற்பகல் மற்றும் இரவில் குளிர் காற்றுடன் கூடி -26சி வெப்பநிலை உணரப்படும் எனவும் இது குறைந்தது -22சி வரை காணப்படும் என நம்பப்படுகிறது.

ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலைய அதிகார சபை இது குறித்து தெரிவிக்கையில்…

இன்று(05) கடந்த 4 மணி நேரத்தில்-21.9சி வெப்பநிலை காணப்பட்டதாகவும், விமான நிலைய நடவடிக்கைகள் வழக்கம் போல் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை,வடகிழக்கு யுனைரெட் மாநிலங்கள் மற்றும் கனடாவின் கிழக்கு பகுதிகள் பனிப்புயலினால் தாக்கப்பட்டிருப்பதால் கனடாவில் தற்போது நிலவும் கடுங்குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Allgemein உலகச்செய்திகள்