கனடாவின் டொரண்டோவில் மூன்று பேருக்கு கத்தி குத்து!!பொலிசார் தீவிரம்!!

கனடாவில் மூன்று பேரை கத்தியால் குத்திய வழக்கில் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்

அத்துடன் குறித்த நபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தள்ளனர்.

டொரண்டோவில் உள்ள ஸ்க்கார்பரோவிலேயே இச்சம்பவம் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பேருக்கு கத்தி குத்து விழுந்த நிலையில் அவசர உதவி குழுவுக்கு இது குறித்து தகவல் தரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர் காயமடைந்த மூவருக்கும் முதலுதவி சிகிச்சையளித்து பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Allgemein உலகச்செய்திகள்