மகிந்தவிற்கு தேவையானது இப்போதும் வழங்கப்படுகின்றது தேவை எனில் கேட்கவேண்டும் ரணில்…!!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கான பாதுகாப்பினை மேலும் அதிகரிக்குமறு ஒன்றிணைந்த எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இந்த கோரிக்கையினை பிரதமர்; ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல் பிரசாரங்களின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்;த ராஜபக்ஸவிற்கு எதிராக எவறேனும் செயற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இதனாலேயே பாதுகாப்பினை அதிகரிக்குமாறு கோரியதாகவும் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நிலையியற் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஆற்றிய விசேட உரையின் போதே இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு தேவையான பாதுகாப்பு தற்போதும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

மேலதிக பாதுகாப்பு தேவையாயின் அதற்கான கோரிக்கையினை முன்வைக்குமாறும் அதன் பின்னர் குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

Allgemein