தெல்லிப்பளையில் போலீஸ் திருட்டு செயலில் பிடிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பிரதேசத்தில், கொள்ளையடிக்க முற்பட்ட இலங்கை காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் தெல்லிப்பளை காவல்நிலையத்தில் கடமை புரிபவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை…

முல்லைத்தீவு கடலில் இருளில் வந்த மர்மப்படகுகளால் குழப்பம்!!

முல்லைத்தீவு கடற்பரப்பில் மர்மப்படகுகளின் நடமாட்டம் காணப்படுவதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்பொழுது இருள் சூழ்ந்துள்ள சந்தர்ப்பத்தில் மூன்று திசைகளில் இருந்து திடீரென வெளிச்சம் தோன்றியமையால் மீனவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சட்டவிரோதப்படகுகள் வந்திருக்கலாம் என்று மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு தகவல்…

சிங்களத் தலைவர்களை விடவும் பிரபாகரன் சிறந்த தலைவர்;ஞானசார தேரர்

ஸ்ரீலங்காவிலுள்ள சிங்களத் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்ததாக தென்னிலங்கையில் செயற்பட்டுவரும் கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களில் பிரதான அமைப்பான பொதுபல சேனா தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர்…

தமிழீழ வரைபடத்துடன் இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து மாபெரும் உந்துருளிப் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளது. தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் கொழும்பில்…

கொழும்பில் கடும் மழையுடனான சூறாவளி; சேத விபரங்கள் தெரியவில்லை!

இலங்கையின் மேற்கே, தலை நகர் கொழும்பில் கடுமையான சூறாவளியும் மழையும் தாக்கியவண்ணமுள்ளன. இதனால் கொழும்பின் பல பாகங்களிலும் உள்ள பாரிய மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வீதியின் நடுவே முறிந்து வீழ்ந்துள்ளன. முன்னதாக இன்று இரவு ஒன்பது மணியை அண்மித்த வேளையில் ஆரம்பமான இந்த குழப்பமான வானிலை பின்னர்…

வடகொரியாவால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் !

வடகொரியா - அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. இன்று அதிகாலையில் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. வடகொரியாவின் தொடர் ஏவுகணைச் சோதனையைக் கண்டித்து, அமெரிக்காவும்,…