பூச்சூட வாருங்கள்

வாருங்கள் உறவுகளே வருங்கால உறவுகளுக்காய் விதையானவர்களை காண வாருங்கள் வரும் காலம் எமதாக களமாடியவர்களின் பெருமை பாட வாருங்கள் வேதனைக்காற்றை அகற்றிட உன்னத உயிரைத்திறந்தவர்களுக்காக பூச்சூட வாருங்கள் சாதனை பயின்று சாமரம் வீசும் சந்ததியினரைக்காண வாருங்கள் சாவு அணைக்காத தவப்புதல்வர்களை தழுவிட வாருங்கள் செங்களமாடி செங்குருதி சிந்தி எம்மண்ணைக்காத்த…

உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்புற நடந்தேறின.

உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்புற நடந்தேறின. தமிழீழ போரியல் வரலாற்றின் அத்திவாரக்கற்களான மாவீரத்தெய்வங்களை மனதுருகி பூசிக்கும் திருநாளின்று. அலையலையாக திரண்ட மக்கள் கூட்டம் தங்கள் வீரப்புதல்வர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செய்து மனமுருகி அழுதனர். அவர்களின் தியாகங்கள் என்றும் வீண்போகாது என்பதை இந்த மாவீரர்நாள் உணர்த்தி…

உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு மாவீரர் இலட்சியத்தை நனவாக்க!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்நாள் அறிக்கை: உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு மாவீரர் இலட்சியத்தை நனவாக்க அயராது உழைப்போம்! இன்று மாவீரர் நாள். நம் தேசத்தின் புதல்வர்களின் திருநாள். நமது தேசத்தினதும் மக்களதும் விடுதலைக்காய் களமாடி விதையாய் வீழ்ந்த எமது மண்ணின் வீரவித்துக்களை நினைந்துருகி, அனைத்துலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள்…