தாய் இறந்ததை அறிந்த மகன் அதிர்ச்சியில் உயிரிழப்பு!

தாய் இறந்ததை அறிந்த மகன் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் இன்று(24) அதிகாலை யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.

கச்சேரி நாவலர் வீதியில் வசிக்கும் தவமணி (72) என்பவர் உடல் சுகவீனம் அடைந்து இன்று அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.அதை கேட்ட அவருடைய மகனான பிரசன்னா (37) அதிர்ச்சி அடைந்து மயங்கியுள்ளார்.

உடனடியாக அவரை பரிசோதித்த வைத்தியர் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Allgemein