மேலை நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோர்கள்,

இலங்கை நாட்டை சேர்ந்த பெற்றோர்கள் தங்களுக்கு பிறந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளை பணத்திற்காக மேலை நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து நாட்டில் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் இலங்கையில் நிகழ்ந்த மாபெரும் மோசடி செயல் அம்பலமாகியுள்ளது.

கடந்த 1980-களில் இலங்கை பெற்றோருக்கு பிறந்த சுமார் 11,000 குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் இருதரப்பிலும் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்த 11,000 குழந்தைகளில் 4,000 குழந்தைகள் நெதர்லாந்து, சுவீடன், டென்மார்க், ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவில் உள்ள பெற்றோர்களுடன் வசித்து வருகின்றன.

இதுபோன்ற விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளில் ஒருவரான Rowan van Veelen(27) என்பவர் ஆவணப்படத்தில் பேசியபோது ‘என்னுடைய உண்மையான தாயாரை சந்திப்பதற்காக நான் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டேன். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் பிறந்து நெதர்லாந்து நாட்டில் விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக தற்போது சமூக வலைத்தளம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த சமூக வலைத்தளத்தில் Rowan van Veelen ஒரு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

’நெதர்லாந்து நாட்டில் விற்பனை செய்யப்பட்ட என்னை போன்றவர்களை கண்டுபிடிக்க டி.என்.ஏ சோதனைகளையும் செய்து வருகிறோம்.

இந்த சோதனை வெற்றி பெற்றவுடன் பிற ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டவர்களையும் மீட்போம்’ என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தில் கூறியுள்ளது உண்மை என தற்போதைய இலங்கை சுகாதார துறை அமைச்சரான Dr. Rajitha Senarathne தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டவர்களை கண்டுபிடிக்க டி.என்.ஏ பரிசோதனை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Allgemein உலகச்செய்திகள்