நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் அழிப்பு நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் கைப்பற்றப்பட்ட ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரித்து அழிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. வழக்குகள் நிறைவடைந்து சான்றுப் பொருள்களாகக் காணப்பட்ட கஞ்சா போதைப் பொருளே அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற…

தமிழீழ நீதிமன்றம் மரணதண்டனை விதித்த நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டோர்க்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஏழாண்டு கடூழிய சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு சிறைத்தண்டனையும் வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்…

பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள்: அரசு எடுத்த முடிவு

பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் அகதிகள் மற்றும் குடியேறுபவர்களை தடுக்க பிரான்ஸுக்கு பிரித்தானியா அரசு இன்னும் அதிகளவில் நிதி ஒதுக்கவுள்ளது. பிரான்ஸில் காலேஸ் மற்றும் டன்கிர்க் நகருக்கு வாரத்துக்கு நூற்றுக்கணக்கான அகதிகள் வருகிறார்கள். இதில் பலர் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்கிறார்கள். இந்த பகுதிகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய சுலபம் என்பதால்…

தமிழ் கைதிகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு சிறிலங்கா படைத்தளபதிகள் உத்தரவிட்டனரா?

சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது. இவர்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் முட்கம்பிகளால் தாக்கப்பட்டமை…

மேலை நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோர்கள்,

இலங்கை நாட்டை சேர்ந்த பெற்றோர்கள் தங்களுக்கு பிறந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளை பணத்திற்காக மேலை நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து நாட்டில் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் இலங்கையில் நிகழ்ந்த மாபெரும் மோசடி செயல் அம்பலமாகியுள்ளது. கடந்த 1980-களில் இலங்கை…

நாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ள சுவிஸ் தமிழ் அகதிகள்,

சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது. சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த…

இலங்கையில் அதிநவீன நகரத்தை அமைக்கப்போகும் கட்டார்!!

இலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைத்துக் கொடுப்பதாக கட்டார் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் கட்டார் அரசாங்க அதிகாரிகள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் விரும்பும் ஓர் இடத்தில் இந்த…

விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் பெறுவதற்காக நிதி திரட்டினார்கள்: 13 தமிழர்கள் மீது வழக்கு பதிவு !!!

13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். குறுங்கடன் திட்டமொன்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு எதிராக இவ்வாறு…

மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா? – ராம்

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இனணந்து பலகட்சிகள் மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் செய்தி ஒன்று தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த மெகா கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் இணைய உள்ளதாம். வடக்கு மாகாண…

சுமந்திரனின் சவாலை ஏற்ற சுகாஸ்

தமிழ் தேசியம் பேசுவோருக்கு சவால் விடுப்பதாக கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே சட்ட ஆலோசகர் சுகாஸ், சுமந்திரனுக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு…