படிப்பதற்கு 30 லட்சம் தர மறுத்த பெற்றோர்!! தூக்கிலிட்டு தற்கொலை !

யாழ். கொக்குவில் பகுதியில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இன்று, அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘பெசன் டிசைன்’ தொடர்பான கல்வியை தொடர்வதற்கு 30 இலட்சம் ரூபாவை வீட்டில் தர மறுத்தமையால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்தை சேர்ந்த டார்வின் மதி என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கொக்குவில் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Allgemein தாயகச்செய்திகள்