தமிழர் காணிகளுக்குள் அத்துமீறல்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தமிழர் காணிகளுக்குள் சிலர் அத்துமீறியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

குறித்த தமிழ் மக்களின் பகுதிக்குள் காத்தான்குடியை சேர்ந்த சிலர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அத்துமீறி வேலி அமைக்க முற்பட்டதையடுத்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    அதன்போது, காணி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடியதால், வேலி அமைக்க வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அத்துமீறல் சம்பவமொன்று கடந்த ஒக்டோபர் மாதமும் இடம்பெற்றிருந்த நிலையில், பராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் தலையீட்டில் அன்றைய தினம் நிலைமை சுமூகமாக்கப்பட்டது.

    இந்நிலையில், இவ்வாறு தமது காணிகளுக்குள் அத்துமீறி காணிக்கு உரிமை கொண்டாடி வருபவர்கள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Allgemein தாயகச்செய்திகள்