மரணசடங்கில் கலந்துகொள்ள வந்த மனைவியும், பிள்ளைகளும் சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரினர்.!!

சுவிட்ஸர்லாந்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி முல்லைத்தீவை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவர் அண்மையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், இலங்கையில் இருக்கும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர்கள் மரணசடங்கில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகம் விசா வழுங்கியிருந்தது.

 

மரணசடங்கில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் இலங்கை்கு திரும்பாமல் அடுத்த நாளே தலைமறைவாகிவிட்டதாக சில இணையதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிவந்த நிலையில்….,

இது தொடர்பாக The director of the Department of Institutions Norman Gobbi வழங்கிய செய்தியை இங்கு தருகிறோம்

பிரிசாகோ (Brissago) : குடும்ப உறுப்பினர்கள் அரசியல் தஞ்சம் கோரினர்.

மனைவியும், பிள்ளைகளும் தங்க அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அவரது சகோதரர் தலைமறைவானார். இதை ஏற்க முடியாது என இது தொடர்பாக உரிய திணைக்களத்தின் இயக்குனரான நோர்மன் கொபி (Norman Gobbi,) தெரிவித்துள்ளார்

இது சம்பந்தமாக சமஷ்டி சபைக்கு எழுதப்போகிறேன்.

கடந்த அக்டோபர் 7ம் திகதி பிரிசாகோவில் (Brissago) மரணமடைந்த 38 வயதுடைய அகதியான இலங்கையர் ஒருவர் தொடர்பாக இவ் அறிவித்தல் வெளிவந்துள்ளது.

லிபறற் (Liberatv) இணையத்தள பத்திரிகைச் செய்தியின்படி மரணமடைந்தவரின் மனைவியும், அவரது இரு பெண் பிள்ளைகளும் ரிசினோவில் (Ticino) அக்டோபர் 20 இல் இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்து கொள்ள சென்றார்கள் எனவும், அங்கு அவர்கள் உத்தியோகபூர்வமாக தங்கள் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர் எனவும் இலங்கையிலுள்ள சுவிஷ் துாதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் அவரது சகோதரர் மறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

m_ep44 மரணசடங்கில் கலந்துகொள்ள வந்த மனைவியும், பிள்ளைகளும் சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரினர்.!! சகோதரன் தலைமறைவு!! m ep44

அந்த மூன்று பெண்களுக்கும் மிகக் குறைந்த கால விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலுள்ள சுவிஷ துாதுவர் கெய்ன்ஸ் வோக்கர் நீடர்கும் (Heinz Walker-Nederkoorn) அவர்களும், குடி வரவுச் செயலாளரும் இச் செய்தியை தாம் ரிசினோ (Ticino) அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினர்.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில் இதனால் ஏற்படக்கூடிய குடிவரவுப் பிரச்சனையைத் தாம் நன்கு அறிவோம் எனவும், மனிதாபிமான நோக்கங்கள் அவற்றை மேவிச் செல்லும் என எதிர்பார்ப்பதாக வும் தெரிவித்தனர்.

சுவிஸ் உள்ள லுகானோ (Lugano) கன்ரோனிலுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளரும், யெகாவா சாட்சியத்தின் ( a member of Jehovah’s Witnesses and human rights activists”) உறுப்பினருமான அந்தோனி ஜோசப் (Anthony Joseph) அவர்களும், கன்ரோன் கிராபன்டன் (Canton Graubünden ) இல் வாழும் பிரமுகரான எரிக் (Eric) எனபவரும் லுகானில் (luganese) பணிபுரியும் சட்டத்தரணியான யசார் ரவி’(Yasar Ravi”) எனபவரும் அக்டோபர் 22ம் திகதி சட்டத்தரணியை மாற்றியதால் மீள அனுப்ப வேண்டாம் எனத்தெரிவித்த அவர்களின் அபிப்பிராயங்களை தூதுவர் நம்பிச் செயற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக உரிய திணைக்களத்தின் இயக்குனரான நோர்மன் கொபியிடம் (Norman Gobbi,) பத்திரிகை வினவியபோது தான் இதையிட்டுக் கவலையடைவதாகவும், பிரசங்கம் செய்வது சுலபம் இதில் உள்ள இடையூறுகள் குறித்து தான் சுவிஸ் தூதுவரை எச்சரித்துள்ளதாகவும், அதிர்ஷ்ட வசமாக துாதுவர் கூட்டு அமைப்பு சட்டம், ஒழுங்கு சிர்குலைவதற்கு ஆதரவாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனை ஏற்க முடியாது. இதையிட்டு மிகவும் கோபமடைந்துள்ளேன். இதில் சம்பந்தப்பட்ட சமஷ்டி உறுப்பினர்களுக்குத் தாம் பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தேசிய ஆலோசகர் லொறன்ஸோ குவாட்ரி (Lorenzo Quadri ) இது குறித்துத் தெரிவிக்கையில், சமஷ்டி அதிகாரிகளின் இவ்வாறான செய்கைகள் மிகவும் நல்லது. பாராட்டுகிறேன்.

இதனால் இவர்களின் இரகசிய செயற்பாடுகளின் இன்னொரு பகுதியையும் அறிய முடிந்துள்ளது. மரண நிகழ்வுகளைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக ஆட்களை சுவிஸிற்குள் கொண்டு வருவதை ஏற்க முடியாது.

சமஷ்டி சபை இதற்கான விளக்கங்களை தருவது அவசியம் என்றார்.

உலகச்செய்திகள்