ஸ்ரீலங்காவில் எதிர்காலத்தில் முச்சக்கரவண்டி வாங்க மாட்டீர்கள்: காரணம் இதுதான்!

இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில்  இன்றையதினம்  போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவில் முப்பது இலட்சத்துக்கும் அதிகமான  முச்சக்கர வண்டிகள் இயங்குகின்ற நிலையில் அதிகமான வாகன நெரிசலும் விபத்துக்களையும்  முச்சக்கர வண்டிகளே ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  தடுப்பதற்கான முயற்சியாக, இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி நிதியமைச்சிடம் கேட்டுள்ளதாக  போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

மேலும், முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Allgemein