இரவில் சென்று காலையில் வரும் அரசியல் வாதியின் மர்ம பயணம்..!

நல்லாட்சி அரசாங்கத்தின் வில்பத்து எல்லைக்கு அருகில் உள்ள மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவர், ஒவ்வொரு மாதமும் அயல் நாடான இந்தியாவுக்கு மாலை நேரம் விமான மூலம் சென்று மறுநாள் காலையிலேயே நாட்டுக்கு திரும்பி விடுகின்றாராம்.

குறிப்பாக இந்த மர்ம பயணத்திற்கு இராஜதந்திர கடவு சீட்டை தான் பயன்படுத்துகின்றாராம்.

அரசியல்வாதி ஒருவர் இராஜதந்திர கடவுச் சீட்டை பயன்படுத்தி ஏனைய நாடுகளுக்கு செல்லும் போது இரு நாட்டுக்கும் கட்டாயம் அறிவிக்க வேண்டும்.

எனினும் சட்ட விதிகளை மீறி இராஜதந்திர கடவு சீட்டை பயன்படுத்தி இந்த பயணத்தை குறித்த அரசியல்வாதி மேற்கொள்கின்றார்.

குறித்த அரசியல்வாதியின் மர்மமான சுற்றுப் பயணம் தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Allgemein