27 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய யாழ். இளைஞர் கைது

சுவிட்ஸர்லாந்திலிருந்து இரண்டு தசாப்பதங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்த தேவன் கமலீசன் என்ற 34 வயது இளைஞரை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தன்னுடைய ஏழாவது வயதில் தனது பெற்றோருடன் சுவிட்ஸர்லாந்திற்கு புகழிடம் கோரிச் சென்ற சென்ற யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட தேவன் கமலீசன் 27 வருடங்களுக்கு பின்னரே நாடு திரும்பியிருந்தார்.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், கமலீசனை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Allgemein