திருமணமான பெண்களில் பலர் கையொப்பமிடும் போது கணவன் பெயரை எழுதுவதில்லை.

திருமணமான பெண்களில் பலர் கையொப்பமிடும் போது அல்லது தமது பெயரை எழுதும் போது திருமதி……..என்று தமது பெயரை எழுதிவிட்டு அடுத்து கணவன் பெயரை எழுதுவதில்லை. தமது பெயரின் முதலெழுத்தை எழுதி கணவன் பெயரையே எழுதுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது பெண்களின் உரிமையை மறுப்பதாகவே நான் கருதுகிறேன். பெண்கள் மனதிற்குள் அதை நினைக்காமல் விடமாட்டார்கள். கட்டுண்டோம் பொறுத்திரப்போம் என இருக்கிறார்களோ தெரியாது.

ஏலையா நடத்திய காலத்தில் சில ஆக்கங்களில் க.வ.முருகதாசன் என எனது பெயரை குறிப்பிட்டிருக்கிறேன்.“க“ என்பது எனது தந்தையின் பெயரான கந்தையா என்ற பெயரின் முதல் எழுத்து.“வ“ என்பது எனது தாயாரின் பெயரான வள்ளியம்மை என்ற பெயரின் முதல் எழுத்து.நான் ஒரு சேர்ட் தைப்பித்தேன்.தையல்காரர் கேட்டார் கொலரில் உங்கள் தந்தையின் பெயரின் முதல் எழுத்தையும் உங்கள் பெயரின் முதல் எழுத்தையும் தைக்கவா என்று அதற்கு நான் KVLM என்று தையுங்கள் என்றேன்.இதில் எனது தந்தையின் தாயின் மனைவியின் பெயர்களின் முதல் எழுத்துக்களாகும்.

சிலரோ அல்லது பலரோ சொல்லலாம் மதிப்பும் மரியாதையும் அன்பும் மனதில் இருந்தால் போதுமென்று.அதில் எனக்கு உடன்பாடில்லை வெளிப்படுத்தவும் வேண்டும் என்பதே எனது கருத்து.

ஆய்வாளர் க.வ.முருகதாசன்

 

Allgemein