முன்னாள் போராளிகளின் பெயரில் புதியதொரு கட்சி ஆரம்பம்!

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில், இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், நேற்றுக்காலை இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இதில் முன்னாள் போராளிகள், அவர்களின் குடும்பத்தினர் பலரும்…

அமெரிக்க இராஜதந்திர அதிகாரி கொள்ளுப்பிட்டி வீதியில்!

கொழும்பில் அமெரிக்க இராஜதந்திர அதிகாரி ஒருவர் இரவு நேர விடுதிக்கு சென்ற நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி கொள்ளுப்பிட்டி மயில் போஸ்ட் எவினிவில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கும் இராஜதந்திர நடவடிக்கைக்காகவும் வருகைத்தந்துள்ள…

தந்தையை வீதியில் விட்டுச் சென்ற புதல்வர்கள்!! அபயக் கரம் நீட்டிய பொலிஸார்!!

அனுராதபுரத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியவர் ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.இரவு வேளையில் யாரோ ஒருவர் முதியவரை வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக அனுராதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், வயதான நபரை மீட்டுள்ளனர். குறித்த நபருக்கு தேவையான உணவு வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக…

யாழ் பல்கலை மாணவர்களுக்கு துணைவேந்தர் விடுத்துள்ள அதிர்ச்சிகரமான அறிவித்தல்!

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், விஞ்ஞானப்பீடம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் ஆகிய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், குறித்த கைதிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கோரியும்…

இலங்கையில் இப்படி ஒரு பெண்ணுக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை

குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மகேஸ் வீரமன், 21 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 15 வயதான சிறுவன் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு குறித்த பெண்ணுக்கு எதிராக 3 குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணையில்…

பயங்கர தீவிபத்தில் அதிஷ்டவசமாய் தப்பித்த மக்கள்

சுவிசில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர்சேதம் ஏதும் நிகழாமல் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். சுவிசின் வாலிஸ் மாகாணத்தில் உள்ள Kleegärtenstrasse என்ற பகுதியில் கிடங்கு ஒன்றில் நேற்று எதிர்பாரதவிதமாக தீப்பிடித்து கொண்டது. அப்போது அங்கு விரைந்த சுமார் 90 தீயணைப்பு படையினர் கிடங்கில் உயிர்சேதம் ஏதும் நடக்காமல்…

200 உயிர்களை பலியெடுத்த வடகொரிய அணு ஆயுத சோதனை

கடந்த மாதம் வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்துமுடித்த பின் பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற போதும் இன்றைய தினமே…

புதிய அரசியலமைப்புக்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரவாம் சுமந்திரன்!

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் உடன்பட்டுள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியல் யாப்பு பேரவை நடவடிக்கை சபையின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இன்று காலை ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…

தண்ணீரில் மிதக்கும் தலைநகரம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையின் பல முக்கிய பகுதிகளிலும்…

இந்தியா சென்ற மகிந்தவுக்கு கடும் பாதுகாப்பு!

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு கொமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் நடைபெறும் பௌத்த கலாசார மாநாட்டில் பங்கேற்பதற்காக மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் மும்பைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும்,…