77 வருடங்களாக உணவு, நீர் இல்லாமல் வாழும் அதிசய மனிதர்!

உணவு மற்றும் நீர் இல்லாமல் ஒரு முதியவர் 77 வருடங்களாக வாழ்ந்து வருவது அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு வேளை சாப்பிடவில்லை என்றாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால் இந்தியாவில் வசிக்கும் ப்ரஹ்லாத் ஜானி என்ற சாமியார் உணவு இல்லாமல் 77 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்.

மாதாஜி என அனைவராலும் அழைக்கப்படும் இவர் இந்தியாவின் பல இடங்களுக்கு நடந்தே செல்கின்றார்.

பல மணி நேரம் தியானம் செய்வது, தன்னை தேடி வருபவர்களுக்கு ஆசி வழங்குவது என இவர் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார்.

இவரை டெல்லிக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தினர். மேலும் அவர் தங்கிய அறையில் பல கமராக்களை வைத்து அவரை கண்கானித்தனர்.

15 நாட்களாக அறையில் இருந்த அவர் உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் இயல்பாக இருந்துள்ளார்.

பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் ஆரோக்கியமாக இருந்ததை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.

தற்போது 82 வயதாகியுள்ள அவர், சுறுசுறுப்பாகவே இன்னும் இயங்கி வருவது அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Merken

Allgemein உலகச்செய்திகள்