எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு;

ஏமக்குறைவு நோய் என தமிழ்க் கலைச்சொல்லால் குறிப்பிடபடும் எயிட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே இல்லாமல் செய்யும் மருந்து ஒன்றினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தயாரித்துள்ளனர். இது 99% எச்.ஐ.வி நச்சுயிரிகளை (virus) எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது HIV நச்சுயிரியின் மூன்று முக்கியமான பாகங்களை தாக்கி அழிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளதால் குறித்த நச்சுயிரிகள் இந்த மருந்துடன் எதிர்த்துப் போராடும் திறனை இழந்துவிடுகின்றன.

அமெரிக்க்காவின் தேசிய மருந்தாக்க சுகாதார ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகளே இந்தக் கண்டுபிடிப்பு சாதனையை நிறைவு செய்துள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சர்வதேச எயிட்ஸ் அமைப்பு, “அற்புதமான ஒரு திருப்பு முனை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்பொழுது குரங்குகள் மீது மேற்கொள்ளபட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் மனிதர்கள்மீதான பரிசோதனை அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச எய்ட்ஸ் அமைப்பின் தலைவர் பேராசிரியர் லிண்டா-கெயில் பெக்கர், பிபிசிக்கு அளித்த பேட்டியில்,

„இது ஒரு அற்புதமான முன்னேற்றமாகவே தெரிகிறது. இந்த விசேடமான னோய் எதிர்ப்பு மருந்துகள் உண்மையிலேயே இயற்கைக்கு அப்பாற்பட்டதாகத் தான் தோன்றுகின்றன, மேலும் இன்று நாம் கற்பனை செய்து கொண்டிருப்பதைவிட அதிகமான பயன்பாடுகளை இது கொண்டிருக்கலாம். விஞ்ஞானிகள், மனிதர்கள் மீதான இதன் முதல் பரிசோதனைகளை 2018 இல் ஆரம்பிப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

ஏமக்குறைவு எனப்படும் எயிட்ஸ் நோயானது மனிதரின் ஏமம் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றாக அழிக்கும் நிலையினைக் கொண்டதாகும். இதற்கு எதிரான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையில் இருந்து தற்போது விஞ்ஞானிகளின் அபாரமான கண்டுபிடிப்பானது மிகவும் பயனுள்ளதாக அமையும் என பலரும் தமது கருத்துக்களினைக் குறிப்பிட்டுள்ளனர்.

Allgemein